2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறு நேற்று நள்ளிரவு வெளியாகிய நிலையில் பெறுபேறுகளின் அடிப்பட...
2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறு நேற்று நள்ளிரவு வெளியாகிய நிலையில்பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் சென் ஜோன் பொஸ்கோ ஆரம்ப பாடசாலை மாணவன் யலீபன்யதூசிகன் 191 புள்ளிகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
பொஸ்கோவில் 216 மாணவர்கள் தரம் 5 பரீட்சையில்தோற்றியதில் 154 மாணவர்கள் வெட்டுப் புள்ளியை தாண்டியுள்ளனர். இதேவேளை யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையில்217 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியதில் 124 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை தாண்டியுள்ளனர். இவர்களில்கிரிதரன் அர்மிதா என்ற மாணவி 186 புள்ளிகளைப் பெற்றுள்ளார். மேலும் யாழ். கொக்குவில் இந்து ஆரம்பபாடசாலை மாணவன் உருத்திரகுமார் மதுசணன் 186 புள்ளிகள் பெற்றுள்ளார். கொக்குவில் இந்து ஆரம்பபாடசாலையில் இம்முறை 188 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியதில் 91 மாணவர்கள் வெட்டுப்புள்ளியைத்தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.