மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 23வது நினைவேந்தல் நிகழ்வும் நினைவுப் பேருரையையும் இன்று(06) பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்...
மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 23வது நினைவேந்தல் நிகழ்வும் நினைவுப் பேருரையையும் இன்று(06) பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் இவ் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் குமார் பொன்னம்பலத்தின் உருவப் படத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், குமார் பொன்னம்பலத்தின் புதல்வருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர் மாலை அணிவித்து ஈகை சுடரும் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும், பொதுமக்களும் குமார் பொன்னம்பலத்தின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூபி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
கலாநிதி க.சிதம்பரநாதன் நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுப் பேருரையினை ஆற்றியிருந்தார்.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன், மத குருமார்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.