இலங்கையில் மாதாந்தம் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுகின்றவர்களுக்கு வரி அறவிடுமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கை அர...
இலங்கையில் மாதாந்தம் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுகின்றவர்களுக்கு வரி அறவிடுமாறு சர்வதேசநாணய நிதியம் இலங்கை அரசாங்கத்துக்கு நிபந்தனை விதித்திருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்பந்துல குணவர்தன நேற்று தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தம் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.
என்றாலும், கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தைவெளிப்படுத்தியதாக அமைச்சர் கூறியுள்ளார்.
எனினும், அரசாங்கம் 100,000 ரூபாவுக்கும் அதிகமான மாத வருமானத்தைப் பெறுகின்றவர்களுக்கு மாத்திரமே வரிவிதிப்பு செய்வது என்ற தீர்மானத்திலிருந்து மாறவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.