புதுவருட தினத்தை சிறப்பிக்கும் முகமாக ஹற்றன், கிங்கோரா வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட தோட்ட அறநெறிப்பாடசாலையில் கல்விகற்கும் 52 மாணவர்களுக்கு ...
புதுவருட தினத்தை சிறப்பிக்கும் முகமாக ஹற்றன், கிங்கோரா வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட தோட்ட அறநெறிப்பாடசாலையில் கல்விகற்கும் 52 மாணவர்களுக்கு நேற்றையதினம் (01) கல்வி உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இது தொடர்பில் சமூக நல்வழிமன்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் கள இணைப்பாளர் பெரியசாமி அன்பரசி , குறித்த பிரதேசத்தில் கல்விகற்கும் 52 மாணவர்களது தேவை தொடர்பில் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கௌசலா சிவா அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த கல்வி உபகரணங்கள் குறித்த கோரிக்கைக்கு அமைவாக அனுப்பிவைக்கப்பட்டது.