கைதடிமேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கமும், வில்கழக மும் இணைந்து நடாத்திய மாபெரும் கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வானது தலைவி திருமதி மக...
கைதடிமேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கமும், வில்கழக மும் இணைந்து நடாத்திய மாபெரும் கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வானது தலைவி திருமதி மகேந்திரன் நிர்மலா தலைமையில் ஆரம்பமானது.
கைதடி மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது, இந்நிகழ்வில் விருந்தினர்களாக ஜெசாக் நிறுவன யாழ் மாவட்ட இணைப்பாளர் திரு ந. சுகிர்தராஜ், மற்றும் விழுது நிறுவன யாழ்மாவட்ட திட்ட உத்தியோகத்தர் செல்வி ஆ. ஆரணி மற்றும் ஏனைய விருந்தினர்கள், மாதர்சங்க, வில்கழக அங்கத்தவர்கள், ஏனைய மாதர் சங்க உறுப்பினர்கள், பார்வையாளர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தார்கள்.