திருகோணமலை மாவட்டம் - சாம்பல்தீவு பிரதேசத்தில் உள்ள இலுப்பைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள மண்கிண்டி மலை ஶ்ரீ முருகன் ஆலயத்தின் கட்டிட பணி...
திருகோணமலை மாவட்டம் - சாம்பல்தீவு பிரதேசத்தில் உள்ள இலுப்பைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள மண்கிண்டி மலை ஶ்ரீ முருகன் ஆலயத்தின் கட்டிட பணிக்காக 100000 ரூபா நிதி உதவியும்
திருகோணமலை மாவட்டம் - செல்வநாயகபுரம் பிரதேசத்தில் உள்ள உதயபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துக்குமாரசுவாமி ஆலய கட்டிட பணிக்காக 50000 நிதி உதவியும் வழங்கப்பட்டன.
இவ் ஆலயத்தில் உள்ள முத்துக்குமாரசுவாமி அறநெறிப் பாடசாலை - ஆசிரயர்கள் மூவருக்கு மாதாந்தம் தை மாதத்திலிருந்து 30000 ரூபாவும் மாணவர்களுக்கான சத்துணவுக்காக 15000 ரூபாவும் வழங்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டது,
வவுனியா மாவட்டம் - நெடுங்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் கட்டிட பணிக்காக 50000 ரூபா நிதி உதவி வழங்கப்பட்டது.
இவ் செயற்றிட்ட உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் நேரடியாகச் சென்று வழங்கி வைத்ததுடன் இவ் உதவித்திட்ட நிகழ்வுகளில் ஆச்சிரம தொண்டர்களும் கலந்து கொண்டனர்.