தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு சீனாவினால் தமிழர்களுக்கு பாரிய உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ள...
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு சீனாவினால் தமிழர்களுக்கு பாரிய உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் பதிவிடப்பட்டுள்ளது.
இதன்படி, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு இன்று முதல் 7 மில்லியன் லீட்டர் டீசல் பரிசாக விநியோகிக்கப்படுகின்றது என சீனா தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பாடசாலைகளுக்கான தேவைகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான உணவு விநியோகத்திற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன பிரதிநிதிகளினால் 60 ஆயிரம் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான பெக்ஸியன் தொண்டு திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சீன தூதரகம் குறிப்பிடுகின்றது.