அஹுங்கல்ல – வெலிகந்த பிரதேசத்தில் காணி ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கிளைமோர் வெடிகுண்டு ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். ப...
அஹுங்கல்ல – வெலிகந்த பிரதேசத்தில் காணி ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கிளைமோர் வெடிகுண்டு ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை (13) மாலை குறித்த கிளைமோர் குண்டு மீட்கப்பட்டதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாழைமரத்தின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.