ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்.வருகைக்கு எதிர்ப்பு தொிவித்து நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்டோர் மீது பொலிஸார் நீர்தாரை பிரயோகம் மே...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்.வருகைக்கு எதிர்ப்பு தொிவித்து நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்டோர் மீது பொலிஸார் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டிருந்த நிலையில் அதில் பல்கலைகழக மாணவர்கள் சிலர் குளித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் சில சிவில் சமூக அமைப்புகள் மேற்படி பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். பேரணி யாழ்.நல்லூருக்கு அண்மித்த பகுதியில் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டபோது பொலிஸார் - போராட்டக்காரர்கள் ஆகியோருக்கிடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.