இலங்கை அணியுடனான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 02 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது. நாணய சுழற்சியில் வெற்றியீட்ட...
இலங்கை அணியுடனான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 02 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி, முதலில் களத் தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி சார்பாக இஷான் கிஷன் 37 ஓட்டங்களையும், தீபக் ஹூடா 41 ஓட்டங்களையும் அதிகூடிய ஓட்டங்களாக பெற்றனர்.
பதிலுக்கு 163 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் தசுன் ஷானக்க 45 ஓட்டங்களையும், குசல் மென்டீஸ் 28 ஓட்டங்களையும் அதிகூடிய ஓட்டங்களாக பெற்றனர்.