உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்குமானால், அதனைத் தடுப்பதற்கு தமது கட்சி அனைத்து நடவடிக்கைகளையும், எடுக்கும் என ...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்குமானால், அதனைத் தடுப்பதற்கு தமது கட்சி அனைத்து நடவடிக்கைகளையும், எடுக்கும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், தற்போது கருவறையில் உள்ள குழந்தைகூட, இந்த ஆட்சியாளர்களின் செயலுக்கு, இழப்பீடு செலுத்த வேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நிலத்தை முத்தமிடும்போதும், மார்பில் தட்டிக்கொள்ளும்போதும், நாட்டின் மீது அன்பு செலுத்துவதாக சிலர் நினைத்தனர்.
ஆனால், நாட்டின் மீது அன்பு செலுத்துவதாயின், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதையே, உண்மையாக செய்ய வேண்டும் என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.