யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, சிறுப்பிட்டி பகுதியில் வேக கட்டுப்பா...
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, சிறுப்பிட்டி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சிறுப்பிட்டி பகுதியில் உள்ள வாகனம் திருத்தும் நிலையத்துக்குள் நுழைந்த பேருந்து, அங்கு நின்ற பேருந்துகளை மோதித் தள்ளியுள்ளது. இதனால் பேருந்தின் முன்பக்கம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. விபத்தில் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.