முன்னாள் அமைச்சரும், முன்னாள் மாகாண ஆளுநருமான ரெஜினோல்ட் குரே தனது 74 ஆவது வயதில் காலமானார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட...
முன்னாள் அமைச்சரும், முன்னாள் மாகாண ஆளுநருமான ரெஜினோல்ட் குரே தனது 74 ஆவது வயதில் காலமானார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்டத் தலைவரும் மேல் மாகாண முன்னாள் முதலமைச்சருமான ரெஜினோல்ட் குரே நேற்றைய தினம் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வாத்துவ ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடலின் போது மார்பைப் பிடித்துக் கொண்டிருந்த அவர், பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைகளுக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதன்போதே, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.