இலங்கை தமிழரசுக் கட்சி கிளிநொச்சி, மட்டக்களப்பு, மன்னார் மாவட்டங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டும்பணம் செலுத்தப்பட்டது. கிளிநொச...
இலங்கை தமிழரசுக் கட்சி கிளிநொச்சி, மட்டக்களப்பு, மன்னார் மாவட்டங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டும்பணம் செலுத்தப்பட்டது.
கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் மன்னாரில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனும் கட்டுப் பணத்தை செலுத்தினர்.
கரைச்சி, பச்சிலைப்பள்ளி,பூநகரி ஆகிய பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணம் இன்று(11) கிளிநொச்சி தெரிவத்தாட்சி அலுவலகத்தில் செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி உள்ளூராட்சி மன்றம் தவிர்ந்த ஏனைய 11 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை நேற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியால் செலுத்தப்பட்டது.