எம்மிடமிருந்து எம்மவர்க்கு எனும் தொனிப்பொருளில் தன்னார்வ இளைஞர்களால் சுத்திகரிக்கும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி பழைய வைத்தியச...
எம்மிடமிருந்து எம்மவர்க்கு எனும் தொனிப்பொருளில் தன்னார்வ இளைஞர்களால் சுத்திகரிக்கும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி பழைய வைத்தியசாலை முன்பாக உள்ள பேருந்து தரிப்பிட சுற்று சூழல் துப்பரவு செய்யப்பட்டதுடன், பேருந்து நிழல்குடை அமைத்துள்ள பகுதியும் தொற்று நீக்கி பயன்படுத்தப்பட்டு நீரினால் சுத்திகரிக்கப்பட்டது.
குறித்த பணியில் இளைஞகள் பலர் தாமாக முன்வந்து பணியில் ஈடுபட்டனர். இதன் போது, கல்வி கற்கும் ஏழை மாணவர்களிற்கு உதவும் வகையில் அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலில் மக்கள் பணம் வழங்கி இளைஞர்களை உற்சாகப்படுத்தினர்.