யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் வசிக்கும் நாற்பது வறிய நிலை குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. பூமணி அம்மா அற...
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் வசிக்கும் நாற்பது வறிய நிலை குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
பூமணி அம்மா அறக்கட்டளையின் செயலாளரான ந.விந்தன் கனகரட்ணம் அவர்களிடம் அவ்வூர் மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய,பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR)பணிப்பாளருமான யாழ்,தீவகம்,வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நெறிப்படுத்தலில்
மேற்குறித்த பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானங்களைக் கொண்ட வறிய நிலை நாற்பது குடும்பங்களுக்கு,குடும்பம் ஒன்றிற்கு இரண்டாயிரம் ரூபாய்ப்படி,எண்பதினாயிரம் ரூபா பெறுமதியான பொங்கல் பொருட்கள்,பூமணி அம்மா அறக்கட்டளையின் உதவிப் பணியாக,பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும் முன்னாள் வலிகாமம் தெற்கு பிரதேசசபை சுன்னாகம்,யாழ்.மாநகரசபை,வட மாகாணசபை உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம் அவர்களால் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.