இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியாவுக்கான சிரேஷ்ட பணிப்பாளர் எலைன் லோபச்சர் ஆ...
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியாவுக்கான சிரேஷ்ட பணிப்பாளர் எலைன் லோபச்சர் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த கலந்துரையாடலில், ஜனநாயகம், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல், உலகளாவிய சூழலை மேம்படுத்துதல் மற்றும் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையேயான 75 ஆண்டுகால இரு நாட்டு நட்புறவு ,இலங்கை மக்களுக்கு அமெரிக்கா அரசாங்கத்தால் வழங்கப்பட்டுவரும் உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியாவுக்கான சிரேஷ்ட பணிப்பாளர் எலைன் லோபச்சர் இன்று இலங்கைக்கு வருகைத்தந்திருந்த நிலையிலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.