காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளராக இருந்த ரந்திமல் கமகே, இன்று டுபாயில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க விமான ...
காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளராக இருந்த ரந்திமல் கமகே, இன்று டுபாயில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காலிமுகத்திடல் போராட்டக்காலத்தில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.