இலங்கை வந்துள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின், சீன சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சர் சென் ஸோ முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்...
இலங்கை வந்துள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின், சீன சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சர் சென் ஸோ முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.
இருவருக்கும் இடையில் நேற்று (15) சந்திப்பொன்று இடம்பெற்றதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவையும் இருதரப்பு ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்காக விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் இரு கட்சிகளாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இன்று (16) காலை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு குறித்து இலங்கை அரசியல் கட்சிகளுக்குத் தெரிவிக்கும் நிகழ்ச்சியை பிரதியமைச்சர் சென் சூ ஷங்ரிலா ஹோட்டலில் நடத்தியதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.