அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது, பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை பிரயோகத்தை நடத...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது, பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.
கொள்ளுபிட்டி பகுதியில் வைத்து, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதையடுத்து, குறித்த பகுதியில் தற்போது அமைதியின்மை நிலவி வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இரண்டாம் இணைப்பு
கொழும்பின் பிரதான பகுதி முடங்கியது.
கொழும்பு – 07, பௌத்தாலோக்க மாவத்தை தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணியினால் வீதியை பொலிஸார் தற்காலிகமாக மூடியுள்ளனர்.
துன்முல்லை சந்தியிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு அருகில் வீதி மூடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கொழும்பு ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் விதித்த தடை
கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஒன்று கூடும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் யூனியன் பிளேஸ் வீதியூடாக வந்து காலி முகத்திடல் நோக்கிச் செல்வதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கொம்பனிதெரு பொலிஸார் நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அமைய கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
எவ்வாறாயினும், காலி முகத்திடலுக்கு நுழையாமல் போராட்டக்காரர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு இந்த தடை உத்தரவு தடையாக இருக்காது என நீதிமன்றம் அந்த உத்தரவில் மேலும் தெரிவித்துள்ளது.