பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரோனிற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நட்பு ரீதியிலான கலந்துரையாடல் ஒன்று இடம்ப...
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரோனிற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நட்பு ரீதியிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
தனிப்பட்ட விஜயமாக டேவிட் கெமரோன், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையிலேயே, டேவிட் கெமரோன், ஜனாதிபதியை இன்று சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு, டேவிட் கெமரோன் புது வருட வாழ்த்துக்களையும் இதன்போது தெரிவித்துள்ளார்.