கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைப்பிராயில் வீடுடைத்து 16 பவுண் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் யாழ்ப்பாண மாவட...
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைப்பிராயில் வீடுடைத்து  16 பவுண் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ்  பரிசோதகர் பிரதீப் தலைமையிலான பொலிஸ் அணியினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
கடந்த 17 ம் திகதிகட்டைப்பிராய் இருபாலையைச்சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்இரண்டு நாட்கள் வீட்டில் இல்லாத சமயம் வீட்டு  கதவை உடைத்து வீட்டில் இருத்த 16 பவுண் நகை களவாடப்பட்டுள்ளது
 திருட்டு சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் கோப்பாய் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த நிலையி்ல் 
சம்பவம் தொடர்பில்  சந்தேகநபர்  யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ்  பரிசோதகர் பிரதீப் தலைமையிலான பொலிஸ் அணியினர் கைது செய்துள்ளனர்
இரண்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு
 சந்தேகநபரிடம் இருந்து களவெடுக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டதுடன் சந்தேகநபர்கள் நீண்டநாள்களாக போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்றும் போதைப்பொருள் பாவனைக்காகவே களவில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளனர் நகைகளும் மீட்கப்பட்டதுடன் நாயன்மார்கட்டை சேர்ந்த 24 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்,

 
 
							     
							     
							     
							    
 
 
 
 
 
