நாட்டின் 75வது சுதந்திர தினத்தன்று பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டமைக்காக தமிழ் பாராளுமன்ற உறு...
நாட்டின் 75வது சுதந்திர தினத்தன்று பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டமைக்காக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தவத்திரு வேலன் சுவாமிகளுக்கும் எதிராக, யாழ்ப்பாண பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணை இன்றைய தினம் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
குறித்த வழக்கினை விசாரணை செய்த நீதிபதி, எதிராளிகளை பிணையில் செல்ல அனுமதித்ததோடு மே மாதம் எட்டாம் திகதி வரை வழக்கினை ஒத்தி வைத்தார்.
வழக்கின் எதிராளிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி தவராஜா, மூத்த சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.