கிழக்கு தமிழர்களின் இருப்பை முஸ்லீம் சிங்கள இனவாதிகளிடம் இருத்து காப்பாற்றுவதற்கு அனைத்து தமிழர்களும் ஒன்றினைய வேண்டும் என இராஜாங்க அமைச்சர்...
கிழக்கு தமிழர்களின் இருப்பை முஸ்லீம் சிங்கள இனவாதிகளிடம் இருத்து காப்பாற்றுவதற்கு அனைத்து தமிழர்களும் ஒன்றினைய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
தனி தமிழ் கட்சியில் தான் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவேன் என குறிப்பிட்ட அவர் அப்போது எமது இருப்புக்காக நாங்கள் குரல் கொடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு,மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் உள்ளுராட்சி சபை தேர்தலில் தமிழர் மகா சபையில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் கொக்கட்டிச்சோலை,முனைக்காட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்