.விடுதலை புலிகளின் இராணுவ கட்டமைப்பை பார்த்து அச்சப்பட்டதாலேயே அரசாங்கம் பேச்சுவார்த்தைகளுக்கு தயாரானது, அப்போதிருந்து 10 நாடாளுமன்ற உறுப்பி...
.விடுதலை புலிகளின் இராணுவ கட்டமைப்பை பார்த்து அச்சப்பட்டதாலேயே அரசாங்கம் பேச்சுவார்த்தைகளுக்கு தயாரானது, அப்போதிருந்து 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக அல்ல. என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நல்லூர் பிரதேசசபை வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.இதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், விடுதலைப்புலிகளின் இராணுவ அமைப்பின் மீதான அச்சம் காரணமாகவே பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என அரசாங்கம் தயாராக இருந்தாகவும்
அவ்வாறான பேச்சுவார்த்தைகளை எதிர்கொள்வதற்கான திராணியும் விடுதலைப் புலிகளிடம் இருந்தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் முன்னைய தமிழ் தேசிய கூட்டமைப்பில் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களே உள்ளதாகவும்
எனவே அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லவேண்டிய தேவை அரசாங்கத்திற்கு அவசியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். விடுதலைக்காக போராடிய தமிழினத்திற்கு தீர்வு என்ற ஒன்று வரும் வரையில் அனைத்துக்கட்சிகளும்
ஒருமித்து செயற்படவேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக கஜேந்திரகுமார் ஒரு கருத்தையும் சுமந்திரன் இன்னொரு கருத்தையும் தாங்கள் இன்னொரு கருத்தையும் கூறிக்கொண்டிருந்தால்
அரசாங்கத்திற்கு தமிழர் தரப்புடன் பேச்சுவார்த்தைக்கு செல்லவேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.