தமிழ் மக்களுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமலும் தனித்து பயணிக்கப்போவதாக வீர வசனம் பேசிய பின்னர் தற்போது அது முடியாத காரியம் என்று தெரிந...
தமிழ் மக்களுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமலும் தனித்து பயணிக்கப்போவதாக வீர வசனம் பேசிய பின்னர் தற்போது அது முடியாத காரியம் என்று தெரிந்தவுடன் தாமே தமிழ் தேசிய கூட்டமைப்பு என சுமந்திரன் கருத்துகளை வெளியிட்டு மக்களை குழப்பி வருவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று கூறி விரும்பினால் தமிழரசு கட்சி வெளியில் நின்று கூறாமல் மீண்டும் இணையுமாறும் அதனை தாம் வரவேற்பதாக குருசாமி சுரேந்திரன் குறிப்பிட்டிருந்தார்.
எனவே மக்கள் இந்த குழப்பங்களை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமென்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது குத்துவிளக்கு சின்னம் என்றும் குருசாமி சுரேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனிமரம் தோப்பாகாது என்ற வகையிலே ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகளை மீண்டும் ஒன்றிணைத்து புதிய கூட்டாக 5 கட்சிகள் இணைந்து செயற்படுவதாகவும் எனவே தமது இந்த கூட்டணியே தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றும் அவர் குறிப்பிடுகின்றார்