பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிகளுக்குமிடையிலான 106 ஆவத...
பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிகளுக்குமிடையிலான 106 ஆவது துடுப்பாட்ட போட்டி மொபிடெலின் அனுசரனையுடன் நேற்று காலை ஆரம்பானது.
தொடர்சியாக இரண்டு நாட்கள் இரண்டு இனிங்ஸ்களாக நடைபெறவுள்ள இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி முதலில்களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென் பற்றிக்ஸ் கல்லூரி 77ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 272 ஓட்டங்களை பெற்ற நிலையில் தனது முதல் இனிங்ஸை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில் சென் பற்றிக்ஸ் கல்லூரி சார்பில் அபிலாஸ் 54 ஓட்டங்களையும் சமிதன் 50 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் யாழ்ப்பாண கல்லூரி சார்பில் பிரியந்தன், மதுசன், ரோய் ஜெனிசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி 22ஓவர்களில் 2விக்கெட்டுக்களை இழந்து ஓட்டங்களை 33 பெற்றபோது முதல்நாள் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.
துடுப்பாட்டத்தில் யாழ்ப்பாண கல்லூரி சார்பில் அதிகபட்சமாக மதுசன் 13 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
இன்று இரண்டாம்நாள் ஆட்டங்கள் தொடர்சியாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.