யாழ்ப்பாணம் மாநகர சபையின் கலாச்சார மண்டபம் ஆனால் மாநகர முதல்வருக்கே தெரியாது பணி நடப்பதாக புத்தசாசன அமைச்சரிடம் மாநகர முதல்வர் இ.ஆனல்ட் தனத...
யாழ்ப்பாணம் மாநகர சபையின் கலாச்சார மண்டபம் ஆனால் மாநகர முதல்வருக்கே தெரியாது பணி நடப்பதாக புத்தசாசன அமைச்சரிடம் மாநகர முதல்வர் இ.ஆனல்ட் தனது ஆதக்கத்தை தெரிவித்தார்.
கலாச்சார மண்டபத்தில் 11ஆம் திகதி இடம்பெறவுள்ள நிகழ்வுகள் தொடர்பில் மாநகர சபைக்கு எதுவும் எவருமே தெரியப்படுத்தாமல் நேரடியாக அனைத்தையும் மத்திய அரசு மட்டுமே செய்யுமானால் நாம் ஏன் அதில் பங்குகொள்ள வேண்டும்.
சிலைவைக்க, கல்லு வைக்க என்றெல்லாம் ஏற்பாடு இடம்பெறுவதாக நாமும் மூன்றாம் நபராகவே அறிகின்றோம் ஆனால் எமக்கு எதுவுமே தெரியப்படுத்தப்படவில்லை. மாறாக இவ்வாறு யாழ்ப்பாண மக்களின் மனநிலைக்கு மாறாக அமையும் பட்சத்தில் அதற்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல என்பதனை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டிய நிலைமையே ஏற்படும்.
இவற்றினை இந்திய தூதரகமும் ஏற்றுக்கொண்டால் அதனை கூறலாம். இவற்றிற்கு மாறாக இடம்பெறும் செயலகளிற்கு மாநகர சபையின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கருத்து மோதல் இடம்பெற்றபோது யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் மற்றும் மாகாண அதிகாரிகள் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.