யாழ்.நெடுந்தீவுக்கு செல்லும் உள்ளூர் மக்கள் மற்றும் அரச ஊழியர்களை விலங்குகளைபோல் நடத்தும் கடற்படையினர்! மக்கள் ஆதங்கம்...

யாழ்.நெடுந்தீவுக்கு செல்லும் உள்ளூர் மக்கள் மற்றும் அரச ஊழியர்களை விலங்குகளைபோல் நடத்தும் கடற்படையினர்! மக்கள் ஆதங்கம்...

யாழ்.குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு கடல் போக்குவரத்தினை பயன்படுத்தும் உள்ளூர் மக்களை கடற்படையினர் விலங்குகள்போல் நடத்துவதாக மக்கள் க...

யாழ்.குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு கடல் போக்குவரத்தினை பயன்படுத்தும் உள்ளூர் மக்களை கடற்படையினர் விலங்குகள்போல் நடத்துவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

குறிப்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வடதாரகை படகில் முன்னுரிமைப்படுத்தி சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஏற்றிவிட்டு, அதன் பின்னரே ஏனைய அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். 




அவ்வாறு தாமதமாகி படகில் அனுமதிக்கப்படுவதால் அரச உத்தியோகத்தர்கள் பொதுத் தேவைகளுக்கு செல்வோர் என பலரும் தங்கள் அன்றாட செயற்பாடுகளை உரிய ‍நேரத்துக்குள் நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் பாதிக்கப்படுவதாகவும் 

நெடுந்தீவுக்கான பயணிகளை கடற்படையினர் விலங்குகளை போல் நடத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். யாழ்.நெடுந்தீவுக்கான கடல் போக்குவரத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வடதாரகை 

மற்றும் குமுதினி ஆகிய படகுகள் இலவச போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ளன. அத்துடன் பிரதேசசபைக்கு நெடுந்தாரகை மற்றும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமான படகு மற்றும் தனியார் படகுகளும் சேவையில் ஈடுபட்டு வந்துள்ளன.

இலவச போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குமுதினி படகு கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் திருத்தப் பணிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனையடுத்து, வடதாரகை படகு மாத்திரமே இலவச பயணிகள் பொதுப்போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருவதுடன், தினமும் காலை 7 மணி மற்றும் 2.30 மணிக்கு நெடுந்தீவிலிருந்து குறிக்காட்டுவானுக்கும், 

காலை 8.30 மற்றும் 4 மணிக்கு குறிக்காட்டுவானிலிருந்து நெடுந்தீவுக்கும் சேவையில் ஈடுபடுவதுடன் சுமார் 100 பயணிகள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஏற்றிச் செல்ல கடற்படையினரால் அனுமதிக்கப்படுகின்றனர். 

இவ்வாறான நிலையில் நெடுந்தீவிலிருந்தும் குறிக்காட்டுவானிலிருந்தும் தினமும் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பல்வேறு தேவைகள் கருதி பயணித்து வருகின்றனர்.அத்துடன் நெடுந்தீவு பிரதேச செயலகம் 

பிரதேசசபை ஆகியவற்றில் பணியாற்றும் 70 வீதமான உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து பணிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் நெடுந்தீவு நோக்கி பயணிக்கும் பயணிகளை விலங்குகள்போல் 

அடைத்து வைத்து வைக்கும் கடற்படையினர் முதலில் சுற்றுலாப் பயணிகளை வடதாரகை படகில் ஏற்றுகின்றனர். எஞ்சிய எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதுடன் ஏனைய பயணிகள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு பல்வேறு தேவைகளை கருதி பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலையில் பயணிகள் குறிக்காட்டுவானிலும் நெடுந்தீவிலும் தடுத்து நிறுத்தப்படுவதால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3320,lanka,8610,medical,7,Medicial,39,sports,348,swiss,15,technology,79,Trending,4213,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: யாழ்.நெடுந்தீவுக்கு செல்லும் உள்ளூர் மக்கள் மற்றும் அரச ஊழியர்களை விலங்குகளைபோல் நடத்தும் கடற்படையினர்! மக்கள் ஆதங்கம்...
யாழ்.நெடுந்தீவுக்கு செல்லும் உள்ளூர் மக்கள் மற்றும் அரச ஊழியர்களை விலங்குகளைபோல் நடத்தும் கடற்படையினர்! மக்கள் ஆதங்கம்...
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgJJteVHQ46jqAxLa-BaJWWj3i3HaAKKCA48pToEw3_SGsynGNi-5Fk0Y_e4yWFn9ADYoE3XUQOUyFJlASrd2AC7UzWbt7JbBZBIk3lsR3WiBNfAdLMBiDS34RGlmgwKAGjY74uQ0lE-0q2i__5NYoBBC1Muj0Aq3DNLL_lI3PjETaiCDIvL8l3tamM=w640-h360
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgJJteVHQ46jqAxLa-BaJWWj3i3HaAKKCA48pToEw3_SGsynGNi-5Fk0Y_e4yWFn9ADYoE3XUQOUyFJlASrd2AC7UzWbt7JbBZBIk3lsR3WiBNfAdLMBiDS34RGlmgwKAGjY74uQ0lE-0q2i__5NYoBBC1Muj0Aq3DNLL_lI3PjETaiCDIvL8l3tamM=s72-w640-c-h360
Yarl Express
https://www.yarlexpress.com/2023/02/blog-post_434.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2023/02/blog-post_434.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content