ஹிக்கடுவை பகுதியில் இயங்கிவந்த தசைப்பிடிப்பு (மசாஜ்) நிலையம் ஒன்றில் தனது மகள் பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக அமெரிக்க பிரஜை ...
ஹிக்கடுவை பகுதியில் இயங்கிவந்த தசைப்பிடிப்பு (மசாஜ்) நிலையம் ஒன்றில் தனது மகள் பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக அமெரிக்க பிரஜை ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இலங்கையில் சுற்றுலா காவல் துறை பிரிவின் பணிப்பாளருக்கு மின் அஞ்சல் வாயிலாக இந்த முறைப்பாட்டினை பதிவு அவர் செய்துள்ளார்.
கடந்த டிசெம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தந்த தாய் தந்தை மகள் ஆகிய மூவரும் ஹிக்கடுவை பகுதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் தாயும் மகளும் தசைப்பிடிப்பு நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
இதன்போது குறித்த தசைப்பிடிப்பு நிலையத்தில் கடமையாற்றியவரால் அமெரிக்க யுவதி பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அமெரிக்க பிரஜையின் முறைப்பாட்டிற்கு அமைய, காலி சிரேஷ்ட்ட காவல்துறை அத்தியட்சகர் அலுவலகம், காலி சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.