வடமாகாண ஆளுநர் செயலகம், யாழ். மாநகர சபை இணைந்த எற்பாட்டில் "இயற்கை வளத்தினை மேம்படுத்துவோம் பசுமையினை உருவாக்குவோம்" என்னும் கருப்...
வடமாகாண ஆளுநர் செயலகம், யாழ். மாநகர சபை இணைந்த எற்பாட்டில் "இயற்கை வளத்தினை மேம்படுத்துவோம் பசுமையினை உருவாக்குவோம்" என்னும் கருப்பொருளில் வடமாகாண மரநடுகை இன்று காலை யாழ். பண்ணை கடற்கரைப்பகுதியில் நடைபெற்றது.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் ஜீவன்தியாகராஜா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டிவைத்தார்.
இவ் நிகழ்வில் யாழ். மாவட்ட அரச அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் மற்றும் வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள், பதவி நிலை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.