இறக்குவானையில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் தஞ்சம் புகுந்த இளம்பெண் உட்பட சுமார் பத்து சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம...
இறக்குவானையில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் தஞ்சம் புகுந்த இளம்பெண் உட்பட சுமார் பத்து சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் குறித்த சிறுவர் இல்லத்தின் பெண் காப்பாளரின் கணவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படும் இந்த இளம் பெண்ணையும், பத்து சிறுமிகளையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்த சிறுமி வயதுக்கு வந்த நிலையில், அவரை குறித்த காப்பாளர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாடசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது, சிறுவர் இல்ல காப்பாளர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது கணவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது சந்தேகநபர் சிறுவர் இல்லத்தில் வைத்து பத்து சிறுமிகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மனைவி வார்டனாக பணிபுரியும் சிறுவர் இல்லத்திற்கு வந்த இந்த சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புலனாய்வாளர்கள் வெளிப்படுத்திய தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.