வடக்கிலேதான் தமிழர்களுக்கு பிரச்சினைகள் உள்ளது,வடக்கிலேதான் தமிழர்கள் உள்ளார்கள் என்ற ஒரு போலியான முகத்தினை இலங்கை அரசு காலம்காலமாக ஏற்படுத்...
வடக்கிலேதான் தமிழர்களுக்கு பிரச்சினைகள் உள்ளது,வடக்கிலேதான் தமிழர்கள் உள்ளார்கள் என்ற ஒரு போலியான முகத்தினை இலங்கை அரசு காலம்காலமாக ஏற்படுத்தி பிரித்தாளும் தந்திரங்களை முன்னெடுத்துவருவதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.
வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகம். எங்களது உயிர்களை மீறி எங்களின் பிணங்களில் ஏறித்தான் வடகிழக்கினை பிரிக்கமுடியும் என்பதை ஒவ்வொரு தமிழரும் உணரவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் சுதந்திர தின நாளை கரி நாளாக பிரகடனப்படுத்தி கடந்த நான்காம் திகதி வடகிழக்கு இணைந்த பல்கலைக்கழக மாணவர்களினால் யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்ட தமிழர் எழுச்சி பேரணி திருகோணமலை நகரினை வந்தடைந்தது.
வடகிழக்கு பிரதேசத்தில் உள்ள தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் வடகிழக்கு இணைந்த தமிழர்களின் தாயகத்தினை வலியுறுத்தி இந்த எழுச்சிப் பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பல்கலைக்கழக மாணவர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பொது அமைப்புக்கள் என பல்வேறு தரப்பினரும் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழ் தேசியம் சார்ந்த அரசியல்வாதிகளும் ஆதரவு வரும் வழங்கி வரும் நிலையில் இன்றைய தினம் திருகோணமலைக்கு எழுச்சியுடன் பேரணி வந்தடைந்தது .
இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருகோணமலையில் உள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தமிழ் தேசிய ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.
அதனை தொடர்ந்து திருகோணமலையில் தமிழ் பேசும் சமூகம் கடந்த 75 வருடங்களாக எதிர்கொண்டு வரும் பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழர் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டடு தமது உரிமையினை வலியுறுத்தி நின்றனர்.
திருமலை நகருக்கு வந்த பேரணி நகரில் உள்ள சிவன் ஆலயத்தில் ஈகைச்சுடர் ஏற்றி உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது வந்தடைந்தது.
இதன்போது தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,சிவாஜிலிங்கம் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். பல்வேறு இடங்களிலும் எழுச்சியை ஏற்படுத்தியதுடன் மூதுரை நோக்கி புறப்பட்டது.