மின்கட்டண அதிகரிப்பு காரணமாக உணவு பொதிகள், கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவு பொதிகளின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 10% ஆல்...
மின்கட்டண அதிகரிப்பு காரணமாக உணவு பொதிகள், கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவு பொதிகளின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் விலை 10% ஆல் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்தார்.
இதற்கு முன்னரும் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்ட போது, பேக்கரி பொருட்களின் விலைகளை நாங்கள் அதிகரிக்கவில்லை. குறிப்பாக, நாட்டு மக்கள் முகம் கொடுத்துள்ள நெருக்கடியை கருத்தில் கொண்டே நாங்கள் விலை அதிகரிப்பை மேற்கொள்ளவில்லை எனவும் அசேல சம்பத் தெரிவித்தார்.