மக்களின் உரிமைகளை நிலைநாட்ட 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெ...
மக்களின் உரிமைகளை நிலைநாட்ட 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், மக்களின் தேவைகளை நிர்ணயிப்பதற்கான ஒரே வழி தேர்தல் என்பதால், தற்போதைய நெருக்கடிக்கு மத்தியிலும் தேர்தலை நடத்துவது அரசாங்கத்தின் கடமையாகும் என்றார்.
இதேவேளை, எங்களுக்கு எப்படி வெற்றி பெறுவது என்பது தெரியும், தற்போதைய அரசாங்கம் வெற்றி பெறுமா இல்லையா என்பதில் உறுதியாக இல்லை எனவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், 13ஆவது திருத்த சட்டம் அவசியம் என்று தற்போதைய அரசாங்கம் நம்பினாலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அந்த கருத்தை பகிர்ந்து கொள்ளவில்லை என்று கூறினார்.
அத்துடன், இது தேவையில்லை என்று நாங்கள் நினைக்கிறோம் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.