தமிழ்த் தேசிய கட்சிகளை இந்தியா பிரித்துசெயல்பட விரும்பவில்லை. ஒற்றுமையுடன் இருப்பதைத்தான் விரும்புகின்றார்கள் என இலங்கை தமிழரசு கட்சியின் தல...
தமிழ்த் தேசிய கட்சிகளை இந்தியா பிரித்துசெயல்பட விரும்பவில்லை. ஒற்றுமையுடன் இருப்பதைத்தான் விரும்புகின்றார்கள் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, தனித்து வாக்கு கேட்பதற்கு இந்தியா காரணமா என்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். அதிகாரங்கள் பகிரப்பட்டு, அவை மீள எடுக்கப்படாத வகையில், இந்தியாவிலுள்ள அரசியல் அமைப்பை போன்று இலங்கையிலும் உருவாக்கப்பட வேண்டும் என்பதே தமிழ் தேசிய கட்சிகளின் கோரிக்கையாக இருந்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் இந்தியா பிரித்து செயற்படுகின்றது என்று கூறுவது பொருத்தமற்ற ஒன்றாகும் அபத்தமானது என நாடாளுன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.