யாழ் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான முடியப்பு றெமீடியஸ் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்...
யாழ் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான முடியப்பு றெமீடியஸ் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பெப்ரவரி 8ம் திகதி பருத்தித்துறை வீதி சிறுப்பிட்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி மு.றெமீடியஸ் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வீதியின் குறுக்கே சென்ற நாய் ஒன்றுடன் மோதியே விபத்திற்கு உள்ளான சமயம் தலைக் கவசம் கழன்றமையினால் பலத்த காயத்திற்கு இலக்காகி சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் மூளையில் ஏற்பட்ட கடுமையான சிதைவு மற்றும் இரத்தக் கசிவுகள் மூளையின் செயற்பாடுகளை கடுமையாக பாதித்ததன் விளைவாக சத்திர சிகிச்சை மற்றும் அதிதீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்கவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.