திருகோணமலையில் அமெரிக்க இராணுவதளம் குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக தான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுவதை அமெரிக்காவின் பாதுக...
திருகோணமலையில் அமெரிக்க இராணுவதளம் குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக தான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுவதை அமெரிக்காவின் பாதுகாப்பு விவகாரங்களிற்கான முதன்மை துணை உதவி செயலாளர் ஜெடிடியா பி ரோயல் நிராகரித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க அதிகாரி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோனை சந்தித்துள்ளார்.
திருகோணமலை தளம் குறித்து எதனையும் தெரிவிக்கவிரும்பவில்லை என்ற கருத்துடனேயே அமெரிக்க அதிகாரி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தார் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.