துருக்கியினால் கோரிக்கை விடுக்கப்பட்டால், உதவிகளை வழங்க இலங்கை தயாராக இருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அதற்க...
துருக்கியினால் கோரிக்கை விடுக்கப்பட்டால், உதவிகளை வழங்க இலங்கை தயாராக இருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அதற்காக இராணுவத்தினர், மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உட்பட 300 பேர் கொண்ட இராணுவக் குழுவொன்றை களமிறக்க இலங்கை தயாராக இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியா பகுதிகளில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பாரிய நில அதிர்வு அனர்த்தங்களால், இதுவரையில் 4,000க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.