தேர்தல் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் முன்னரே தேர்தல் நடத்தப்படாது என அறிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மூன்று வருட சிறை...
தேர்தல் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் முன்னரே தேர்தல் நடத்தப்படாது என அறிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
மேலும், தேர்தலுக்கு இடையூறு விளைவித்தமைக்காக ஜனாதிபதிக்கு எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு செல்லவேண்டி வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு எதிராக இன்று முதல் மக்கள் படையொன்று அழைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் நீதிமன்றில் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டு, நீதிமன்றின் தீர்மானம் வழங்குவதற்கு முன், தேர்தல் நடத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்தமை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்றார்.