எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் வகையில் சேவைக்கு சமூகமளிக்காக 20 ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலு...
எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் வகையில் சேவைக்கு சமூகமளிக்காக 20 ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்…
இன்று காலை முதல் தொழிற்சங்க தலைவர்கள் என்ற வகையில் எரிபொருள் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்திய 20 பேருக்கு இதுவரை கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு சேவை செய்யும் இடங்களுக்கு நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓய்வு பெற்றவர்கள் எவ்வாறு சேவை செய்யும் இடங்களுக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பதையும் கண்டறிவதற்கான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுப்பதற்கான குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.