யாழ்.பனிப்புலம் ஐயப்பன் கோவிலடியில் கடந்த மாதம் 26ம் திகதி ஒருவர் மீது வாளால் வெட்டி காயப்படுத்தி அவரது காரையும் சேதப்படுத்தி தப்பிச் சென்ற ...
யாழ்.பனிப்புலம் ஐயப்பன் கோவிலடியில் கடந்த மாதம் 26ம் திகதி ஒருவர் மீது வாளால் வெட்டி காயப்படுத்தி அவரது காரையும் சேதப்படுத்தி தப்பிச் சென்ற நால்வர் கைது.
யாழ்.மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரால் இன்று கைது செய்தனர்.
சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையில் கனடா நாட்டிலிருந்து இரண்டு லட்சம் ரூபா பணம் அனுப்பப்பட்டு இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
என தெரியவந்துள்ளது. பனிப்புலம் மற்றும் சங்கானை பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும்
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து வாள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.