6000 கிலோ மனித பாவனைக்குதவாத பழப்புளி வைத்திருந்தவருக்கு தண்டம்!

6000 கிலோ மனித பாவனைக்குதவாத பழப்புளி வைத்திருந்தவருக்கு தண்டம்!

6000 கிலோ மனித பாவனைக்குதவாத பழப்புளி வைத்திருந்தவரை குற்றவாளி என இனங்கண்ட நீதிமன்றம் 90000 ரூபா தண்டப்பணம் விதித்தது. 2022 ஐப்பசி மாதம் 25ம...

6000 கிலோ மனித பாவனைக்குதவாத பழப்புளி வைத்திருந்தவரை குற்றவாளி என இனங்கண்ட நீதிமன்றம் 90000 ரூபா தண்டப்பணம் விதித்தது.

2022 ஐப்பசி மாதம் 25ம் திகதி, பழப்புளியை சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைப்பது குறித்து, யாழ்நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



சம்பவ இடத்திற்கு உடனடியாகச் சென்ற சுகாதாரப் பரிசோதகர் மேற்கொண்ட சோதனையின் போது 6000 கிலோ பழப்புளி கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மறுநாள் 26ஆம் திகதி மேலதிக நீதவான் முன்னிலையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு சந்தேக நபரும் 6000 கிலோ பழப்புளியும் பொதுச் சுகாதார பரிசோதகரால் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டன.

வழக்கை விசாரித்த நீதிபதி, சந்தேக நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், புளியை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்ததன் பின்னர், புளியை அழிக்குமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு உத்தரவிட்டார். பின்னர் சந்தேக நபர் 36 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கடுமையான நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார்.


இந்த நிலையில், அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கை கிடைக்கப்பெற்றது. அந்த அறிக்கையில் பழப்புளி வண்டுகள் தாக்கிய நிலையில் காணப்படுவதாகவும், அது மனிதர்கள் உண்பதற்கு ஏற்றதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​சந்தேக நபருக்கு எதிராக 09 குற்றச்சாட்டுகளுடன் பொது சுகாதார பரிசோதகரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பொதுச் சுகாதார பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து குற்றங்களுக்கும் சந்தேக நபர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன் 90,000 ரூபா தண்டப்பணமும் விதித்தது.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3321,lanka,8611,medical,7,Medicial,39,sports,348,swiss,15,technology,79,Trending,4214,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: 6000 கிலோ மனித பாவனைக்குதவாத பழப்புளி வைத்திருந்தவருக்கு தண்டம்!
6000 கிலோ மனித பாவனைக்குதவாத பழப்புளி வைத்திருந்தவருக்கு தண்டம்!
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEj5smB3Dn58xaJ3Axm4fPxqif24vA7Es7SGx4ytdQZhfysEiE8ZGJ-xVnA0PNEKu02UNyz_SQz4pwxMXYvHlKk3gbas5St1TAjKZPH-kQEh5msBa043Ang82sHcSCLrSP370gQn98OPj8dNrEErkGDJE3tATpN_yBUIwClEgh5Uk5YCamzUvJvvZcC5=w640-h480
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEj5smB3Dn58xaJ3Axm4fPxqif24vA7Es7SGx4ytdQZhfysEiE8ZGJ-xVnA0PNEKu02UNyz_SQz4pwxMXYvHlKk3gbas5St1TAjKZPH-kQEh5msBa043Ang82sHcSCLrSP370gQn98OPj8dNrEErkGDJE3tATpN_yBUIwClEgh5Uk5YCamzUvJvvZcC5=s72-w640-c-h480
Yarl Express
https://www.yarlexpress.com/2023/03/6000.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2023/03/6000.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content