1.3.2023-14.3.2023 அல்லது 2023 எது முதலில் நிகழ்கிறதோ அதுவரை யாழ் மாநகர பிரதி முதல்வருக்கு எட்டு வகையான செலவுகளை மேற்கொள்வதற்கு வடமாகண ஆளுநர...
1.3.2023-14.3.2023 அல்லது 2023 எது முதலில் நிகழ்கிறதோ அதுவரை யாழ் மாநகர பிரதி முதல்வருக்கு எட்டு வகையான செலவுகளை மேற்கொள்வதற்கு வடமாகண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அனுமதி வழங்கி உள்ளார்.
யாழ் மாநகர சபையின் முதல்வராக இருந்த இமானுவேல் ஆனால்ட் தனது இரண்டாவது வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த நிலையில் ஆறு மேலதிக வாக்குகளினால் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தது.
இதனை அடுத்து முதல்வரின் பதவி விலக்கப்பட்ட நிலையில் பிரதி முதல்வராக இருந்த துரைராசா ஈசன் கடமைகளை பொறுப்பேற்றார்.
இன் நிலையில் அடுத்த வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் காலப்பகுதி வரை அல்லது 2023 வரை எது முன்னர் நிகழ்கிறதோ அதுவரை சம்பளங்களும் பாடிகளும், வழக்கப் பொருட்களும் தேவைப் பொருட்களும், பயணப்பாடிகள், தொலைத் தொடர்பு ஏற்றி இறக்கல்
மற்றும் பயன்பாட்டு சேவைகள், பழுது பார்த்தல் பராமரிப்பு, வட்டி கொடுப்பனவுகள், சபை ஓய்வூதியக் கொடுப்பனவு மற்றும் இலங்கை வங்கி குத்தகை ஆகியவற்றுக்கு செலவு செய்யும் அதிகாரம் பிரதி முதல்வருக்கு ஆளுநரால் வழங்கப்பட்டுள்ளது.