ஒருபுறம் சர்வதேச நாணய நிதியத்திடம் நாட்டை நாங்கள் சுபீட்சமான ஒரு நிலைக்கு கொண்டு செல்ல போகின்றோம் என கூறிக்கொண்டு மறுபக்கம் நல்லிணக்கத்திற்க...
ஒருபுறம் சர்வதேச நாணய நிதியத்திடம் நாட்டை நாங்கள் சுபீட்சமான ஒரு நிலைக்கு கொண்டு செல்ல போகின்றோம் என கூறிக்கொண்டு மறுபக்கம் நல்லிணக்கத்திற்கு முழுமையான செயற்பாடுகளை செய்து தமிழ் மக்களை புறக்கணிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி, பட்டிருப்பு தேசிய பாடசாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இந்த நாட்டினுடைய நிலைமை மோசமான நிலையை நோக்கி செல்கின்ற பொழுது மாணவர்களுக்கு தங்களுடைய கல்வி பாதையிலே சரியான வகையில் கவனம் செலுத்துவதே மாணவர்களாகியவர்கள் தற்போது செய்ய வேண்டிய விடயம்.ஏனெனில் நாட்டில் ஏனைய விடயங்கள் மாணவர்களுடைய கைவசம் அதற்கான முடிவுகள் இல்லை.
இலங்கையை எடுத்து நோக்கினால் இலங்கை ஒரே ஒரு நாடாக உலகத்திலே காணப்படும் தங்களுடைய நாட்டினுடைய சக குடிமக்கள் கொல்லப்படும் பொழுது கொத்துக்கொத்தாக இலங்கையிலே இருக்கும் பிரதிகள் அழிக்கப்பட்ட பொழுது அதை பார்த்து சந்தோஷப்பட்டு வீதிகளிலே வெடி கொளுத்தி பால் சோறு சமைத்த மக்களும் இலங்கை மக்கள் தான்.
அதேபோல தான் உலகத்திலேயே சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை கண்டு அதற்குடி கொளுத்தி பால் சோறு சமைத்த மக்களும் இலங்கையில் இருக்கும் மக்கள் தான் அந்த அடிப்படையிலேயே இலங்கையில் வாழும் மக்கள் மிகவும் ஒரு வித்தியாசமானவர்கள் என்றே கூற வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் உடைய ஒரு ஒப்பந்தம் என்பது இலங்கைக்கு கிடைத்த ஏதோ ஒரு பெரிய வரப்பிரகாசம் என நாங்கள் கூற முடியாது. அதாவது நாங்கள் வங்குரோத்து நிலையிலே இருக்கின்றோம் என்பதை உறுதி செய்கின்ற விடயமே இந்த சர்வதேச நாணய நிதிதியத்தின் ஒப்பந்தம்.
இந்த சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் ஊடாக வரும் காலங்களில் செய்யக்கூடிய விடயம் நாங்கள் மீண்டும் கடன் வாங்கக்கூடிய நிலைக்கு எங்களுடைய நாடு மாறி வருகின்றது. அதாவது வங்குரோத்து நிலையிலிருந்து கடன் வாங்கக்கூடிய நாடு என்கின்ற நிலைக்கு அந்தஸ்து மாறி இருக்கின்றது.
கடனை மாத்திரம் வைத்து நாட்டை முன்னெடுக்க முடியாது
சர்வதேச நாணய நிதியின் ஊடாக வரும் கடனை வைத்து மாத்திரம் நாட்டை தொடர்ந்து முன்னெடுக்கலாம் என்று சொன்னால் அது ஒரு முட்டாள் தனமான சிந்தனை.
நாங்கள் சொன்ன விடயம் முதலீடுகளை கொண்டு வருவதற்காக எங்களுடன் சேர்ந்து செயல்படுங்கள். தமிழருக்கான நிரந்தரமான அரசியல் தீர்வை வழங்குவதினூடாக எங்களுடைய அதிகாரப்பகிர்வை சரியான வகையிலே நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நாங்கள் பாரிய முதலீடுகளை நாங்கள் இந்த நாட்டுக்குள் கொண்டு வருவோம்.
இந்த முதலீட்டை கொண்டுவந்து இலங்கையின் பணவீக்கத்தை குறைக்க கூடியதாக இருக்கும் இவை எவற்றினையும் செவிமடுக்காமல் தான்தோன்றித்தனமாக செயல்படுத்திக் கொண்டிருப்பதை நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது.
கடன் தொடர்பான சரியான புரிந்துணர்வை மக்கள் பெற வேண்டும்
இந்த சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை கண்டு வெடி கொளுத்தி அதை பார்த்து சந்தோஷப்பட்டு பால் சோறு செய்தவர்கள் எல்லாம் இதைப்போல தான் 2020 ஆம் ஆண்டு கோட்டபாய ராஜபக்ச அவர்கள் வந்த போது பால் சோறும் செய்தார்கள் வெடி கொளுத்தினார்கள்.
அதே மக்கள் தான் மீண்டும் அவர்களை விரட்டி அடித்தார்கள்.இதேபோன்று வெறுமனே சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் ஊடாக அவர்கள் சொல்லும் விடயத்தினை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக மாத்திரம் இந்த நாட்டை கட்டி எழுப்ப முடியாது என்கின்ற செய்தியை மாத்திரம் தான் நான் சொல்ல விரும்புகின்றேன்.
சர்வதேச நாணய நீதியத்துடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு சிலர் பேசியபோது இறப்பினத்திற்கான தீர்வு இவ்வாறாக உள்நாட்டுக்கு இடையிலே இருக்கின்ற விடயங்கள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் எந்த ஒரு நிபந்தனையும் முன்வைக்காது என்று ஆணித்தரமாக எழுத்து மூலமாக தந்து இருக்கிறார்கள்.
இவை அனைத்தும் தெரியாமல் தான் கூறுகின்றார்கள். தற்பொழுதும் சர்வதேச நாணய நிதியத்தினுடன் ஒப்பந்தம் செய்ததன் பிற்பாடும் இவ்வாறான நிபந்தனைகளை உள்ளடக்க வேண்டும் என்று சொல்வதும் மிகவும் ஒரு வேடிக்கையான விடயமாக இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.