டுபாயில் மறைந்திருந்து இலங்கையில் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தி வரும் "ஜில்" என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் உதவியாளர் ஒருவர...
டுபாயில் மறைந்திருந்து இலங்கையில் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தி வரும் "ஜில்" என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த நபர் உல்லாச விடுதியின் முகாமையாளர் என்ற பதவில் இருந்துக்கொண்டு குறித்த மோசடியை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் கைது செய்யப்படும் போது 10 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மற்றும் சர்வதேச நாணயங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
150 கிராம் ஹேஷ் போதைப்பொருள், 5,100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக கூறப்படும் 612,430 ரூபா என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சந்தேக நபர் டுபாய் நாட்டில் தலைமறைவாக உள்ள "ஜில்" என்பவரின் சகோதரருக்கு சொந்தமான உல்லாச விடுதியின் முகாமையாளர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் நுவரெலியா, அக்கரபத்தன பிரதேசத்தில் வசிக்கும் 39 வயதுடையவராவார்.
சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.