போப் பிரான்சிஸ் ரோமில் உள்ள கெமல்லி வைத்தியசாலையில் நேற்று திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் போப் ஆண்டவருக்கு பல மருத்துவ பரிச...
போப் பிரான்சிஸ் ரோமில் உள்ள கெமல்லி வைத்தியசாலையில் நேற்று திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் போப் ஆண்டவருக்கு பல மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
போப் ஆண்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் விரிவான விவரங்கள் எதையும் வத்திக்கான் வெளியிடவில்லை.
எனினும், ஏற்கனவே திட்டமிட்டப்பட்ட பரிசோதனைகளுக்காக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
போப் பிரான்சிஸ் சமீப காலமாக முதுமை தொடர்பான உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.