உக்ரைனின் தலைநகரான கிய்வ் பகுதியிலுள்ள ஒரு பாடசாலையை ரஷ்யாவின் ஆளில்லா விமானம் இரவோடு இரவாக தாக்கியதில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன் பலர் பட...
உக்ரைனின் தலைநகரான கிய்வ் பகுதியிலுள்ள ஒரு பாடசாலையை ரஷ்யாவின் ஆளில்லா விமானம் இரவோடு இரவாக தாக்கியதில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயம் அடைந்திருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் ஒருவர் 40 வயது மதிக்கத்தக்க சாரதி ஆவார். சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஷ்ய படையின் தாக்குதலால் இடிந்து சேதமடைந்த கட்டிடத்தின் புகைப்படங்களை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதலில் இரண்டு மாணவர் குடியிருப்புகளின் இரண்டு தளங்கள் மற்றும் படிப்பதற்காக பயன்படுத்தப்படும் கட்டிடம் சேதமாகியுள்ளது என தெரிவித்துள்ளது.