உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகங்களுக்கு இட...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர்கள் ஒன்றியம் ஆரம்பித்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் வைத்து இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.