இங்கிலாந்தில் கைதான நிமல்ராஜன் கொலை சந்தேகநபர் குறித்து தொடர்ந்தும் விசாரணை...

இங்கிலாந்தில் கைதான நிமல்ராஜன் கொலை சந்தேகநபர் குறித்து தொடர்ந்தும் விசாரணை...

போர்க்காலப்பகுதியில் தமிழ் - சிங்கள ஊடகங்களுக்காக யாழ்ப்பாணத்தின் செய்தியாளராக பணியாற்றிய ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை செய்யப்பட்ட...

போர்க்காலப்பகுதியில் தமிழ் - சிங்கள ஊடகங்களுக்காக யாழ்ப்பாணத்தின் செய்தியாளராக பணியாற்றிய ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், கைது செய்யப்பட்டவரை, தொடர்ந்தும் விசாரித்து வருவதாக இங்கிலாந்தின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு, கைதுசெய்யப்பட்ட அவர், போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நோர்த்தம்டன்ஷயர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

2000 ஆம் ஆண்டு இலங்கையில் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொல்லப்பட்ட வழக்கில் 49 வயதான இவர் கடந்த வருடம் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களை உள்ளடக்கிய சர்வதேச குற்றவியல் நீதிமன்றச் சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டபோதும், அவர் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன என்றும் மெட்ரோபொலிடன் காவல்துறையினரை கோடிட்டு நொதம்டன்ஷயர் டெலிகிராப் தெரிவித்துள்ளது.

செய்தியாளர் நிமலராஜன், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி கொல்லப்பட்டார்.

இதன்போது துப்பாக்கிதாரிகள் அவரது தந்தையை கத்தியால் தாக்கினர். வீட்டில் இருந்த ஏனைய குடும்ப உறுப்பினர்களையும் காயப்படுத்தினர்.


நிமலராஜன் இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ் மொழி சேவைகளுக்காக பணியாற்றினார் மற்றும் நாட்டின் பொதுத் தேர்தலை சீர்குலைத்த வன்முறைகள் குறித்து செய்திகளை வெளியிட்டு வந்தார்.

தமிழ் போராளிக் குழுவொன்று மனித உரிமை மீறல்கள் மற்றும் வாக்கு மோசடிகளில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

அவரது மரணத்திற்குப் பிறகு சிலர் கைது செய்யப்பட்டனர், ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில் 2017ஆம் ஆண்டில் நோர்த்தம்டன்ஷயர் பெருநகர காவல்துறை கொலை தொடர்பாக ஒரு பரிந்துரையைப் பெற்று விசாரணையை ஆரம்பித்தது.

நிமலராஜனின் கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் நோர்த்தாம்டன்ஷயரில் வசிப்பதாகக் கூறப்படுபவரின் தகவல்களின் ஆவணமும் 2020 இல் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேவேளை இந்த விசாரணையின் புலனாய்வுக்கு உதவக்கூடிய, குறிப்பாக பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்து தற்போது வசிக்கும் இலங்கை சமூகத்தின் உறுப்பினர்கள் எவரும் தகவல்களைக் கொண்டிருந்தால், அவற்றை பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக நோர்த்தம்டன்ஷயர் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,254,doctor,13,Gallery,129,india,385,Jaffna,3294,lanka,8589,medical,7,Medicial,39,sports,326,swiss,15,technology,79,Trending,4201,Videos,10,World,575,Yarlexpress,4268,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: இங்கிலாந்தில் கைதான நிமல்ராஜன் கொலை சந்தேகநபர் குறித்து தொடர்ந்தும் விசாரணை...
இங்கிலாந்தில் கைதான நிமல்ராஜன் கொலை சந்தேகநபர் குறித்து தொடர்ந்தும் விசாரணை...
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiTEZX56_atgL6ECHs0q_Qfah-78d_Kec5uYjUh_ZlAFwSUzESh7axd0fqizNckz9AaOOy__8VyWCzkBEqdXRt4MC0BDd2xzPOIcpeszv48KO3YJ9K0AHj9JYRJtrHLvy1YRc6YspAfqEMIZ5C10v5SFJ1vg7LJmjFj10e7v-xM3WweXxUetGLx67B3=w480-h640
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiTEZX56_atgL6ECHs0q_Qfah-78d_Kec5uYjUh_ZlAFwSUzESh7axd0fqizNckz9AaOOy__8VyWCzkBEqdXRt4MC0BDd2xzPOIcpeszv48KO3YJ9K0AHj9JYRJtrHLvy1YRc6YspAfqEMIZ5C10v5SFJ1vg7LJmjFj10e7v-xM3WweXxUetGLx67B3=s72-w480-c-h640
Yarl Express
https://www.yarlexpress.com/2023/03/blog-post_750.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2023/03/blog-post_750.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content